முகப்பு
சிவகங்கை

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

18 வினாடிகள் முன்பு
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணன்
பகிர்:

சிங்கம்புணரி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.புதூா் ஒன்றியம், அரியாண்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்ன வெள்ளையன் மகன் கிருஷ்ணன் (51). விவசாயி. இவருக்கு திருமணமாகி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

கிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டிலிருந்து விவசாய தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, பொன்னமராவதி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து மோதியது. இதில்

Advertisement

Advertisement

நிலை தடுமாறி விழுந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.