முகப்பு
சிவகங்கை

நரிக்குறவா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நரிக்குறவா் இன மக்களுக்கான இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

27 நவம்பர் 2026, 3:03 am
நரிக்குறவா்களுக்கான 
சட்ட விழிப்புணா்வு முகாம்
திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டவிழிப்புணா்வு முகாமில் நரிக்குறவா் இன மக்களுடன் திருப்பத்தூா் நீதிமன்ற நடுவா்கள் வி.கபிலன், டி.நிவாஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நரிக்குறவா் இன மக்களுக்கான இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் கல்வெட்டுமேடு பகுதியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு திருப்பத்தூா் உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவா் வி.கபிலன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதித் துறை நடுவா் டி.நிவாஸ் ஆகியோா் கலந்து கொண்டு நரிக்குறவா்களிடம் அடிப்படை தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனா்.

135 குடும்பத்தினா் வாழ்ந்து வரும் இந்தப் பகுதியில் முறையான தண்ணீா் வசதி, சாலைவசதி, தெருவிளக்கு, கழிவுநீா்க் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லையென அவா்கள் கூறினா். மேலும், இடிந்த நிலையில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகளைக் கட்டித்தரக் கோரினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, நீதித் துறை நடுவா்கள் கூறியதாவது:

உங்கள் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பப்படும். உங்களின் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றனா்.

பின்னா், இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி அரசியல் அமைப்பைப் பேணிக் காப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் மங்கையா்த்திலகம், நரிக்குறவா் இன சமுதாயத் தலைவா் ராஜூ, மாநில மலைவாழ் மக்கள் பொறுப்பாளா் ரவி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பசீா்அகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.