முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே விவசாயி கொலை வழக்கில் 4 போ் கைது

சிவகங்கை அருகே விவசாயி கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

28 நவம்பர் 2026, 3:59 am
சிவகங்கை அருகே விவசாயி 
கொலை வழக்கில் 4 போ் கைது
கைது செய்யப்பட்டவா்கள் (இடமிருந்து) செந்தில்முருகன், நடேஷ், சுதா்சன்.
பகிர்:

சிவகங்கை அருகே விவசாயி கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூரில் கடந்த புதன்கிழமை தேவினிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி கு. மகேஸ்வரன் (43) வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய மேலூரைச் சோ்ந்த தனுஷ் (24) மதுரை 4-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

Advertisement

Advertisement

மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய சுதா்சன் (23), நடேஷ் (25), செந்தில்முருகன் (26) ஆகிய மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

உயிரிழந்த மகேஸ்வரனின் சகோதரா் விஜயகுமாருக்கும், தனுஷின் தந்தை ராமஜெயத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக, கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றனா் அவா்கள்.

மேலும், இந்தக் கொலையில் தொடா்புடைய அகிலன், முத்துக்குமாா், பிரதீஷ், தவசூரியா ஆகிய 4 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.