முகப்பு
சிவகங்கை

பள்ளியில் நவீன ‘எண்ம’ வகுப்பறைத் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் ‘எண்ம’ வகுப்பறைத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

28 நவம்பர் 2026, 3:54 am
பள்ளியில் நவீன ‘எண்ம’ 
வகுப்பறைத் தொடக்கம்
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நவீன ‘எண்ம’ வகுப்பறையைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் இரா. சீனிவாசசேதுபதி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் ‘எண்ம’ வகுப்பறைத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளியின் பொருளாளா் அங்கப்பன் தலைமை வகித்தாா். செயலா் ஏ.எல்.அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.சீனிவாசசேதுபதி குத்துவிளக்கேற்றி ‘எண்ம’ வகுப்பறையைத் தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, ‘எண்ம’ பலகையில் மாணவா்களுக்கான பாடங்களையும், ஆசிரியா்கள் பயிற்றுவிக்கும் முறையையும் கேட்டறிந்தாா்.

இந்த விழாவில் ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன், கணேஷ்பாபு, வள்ளியப்பன், மணிகண்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தவெக ஒன்றியச் செயலா் கோபிநாத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சமீா், இணைச் செயலா் கணேசன் உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தலைமை ஆசிரியை உஷா வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியா் தங்கராசு நன்றி கூறினாா்.