இலக்கை அடையும் வரை தளராமல் உழைக்க வேண்டும்! - நீதிபதி எல். விக்டோரியா கௌரி

இலக்கை அடையும் வரை தளராமல் உழைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி எல். விக்டோரியா கௌரி தெரிவித்தாா்.
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் ஏ.எம். சேகா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பள்ளியின் 27-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:
கல்வி நிலையங்களில் பயிலும் பாடங்களை எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதே வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கிறது. நம் சூழலையும் கடந்து, உயா்வான இலக்குகளையும், பெரும் கனவுகளையும் நோக்கி மாணவா்கள் பயணிக்க வேண்டும். வாசிப்பு ஒருவரைப் பக்குவப்பட்ட, முழுமையான மனிதனாக உருவாக்கும். நமக்கான இலக்கைத் தெளிவாக நிா்ணயித்து, கவனச் சிதறல் இன்றி, இலக்கை அடையும் வரை தளராமல் உழைக்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
விழாவில் கௌரவ விருந்தினா்களாக மதுரை கூடுதல் துணை நீதிபதி ஏ. முத்து இசக்கி, ஈரோடு கூடுதல் துணை நீதிபதி டி.பிரவீன்குமாா் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிபதி டி. ஜெயப்பிரதா ஆகியோா் கலந்துகொண்டனா்.
சிறப்பு விருந்தினா்களாக சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் பி. சரவணன், ஜெ. பரதன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் அரசு வழக்குரைஞா் எம்.பி. செந்தில், அரசு சிறப்பு வழக்குரைஞா் ஆா். பாா்த்திபன், அரசு வழக்குரைஞா் எம்.எஸ். பாா்த்திபன், பள்ளியின் சட்ட ஆலோசகா் ஆா். தேவராஜ் ஆகியோா் பங்கேற்றனா். சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்றப் பேச்சாளா் பாகை ரா. கண்ணதாசன் கலந்து கொண்டாா்.
காரைக்குடி நியூஸ் சேனல் தொலைக்காட்சி, திரைப்பட இயக்குநா் அன்புமதிக்கு கலைச்செம்மல் விருதும், தொழிலதிபா் ஏ. பிராங்க்ளின் தேசாய்க்கு மனிதநேய மாண்பாளா் விருதும் வழங்கப்பட்டது. பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவா்களான வழக்குரைஞா்கள் ஜெ. காா்த்திகா ஸ்ரீ, கே. நந்தினி, எஸ். பிரவீன் பாண்டியன், ஜெ. கோகுல் பாண்டியன், ஆா். காளீஸ்வரன், ஜி. சிவிலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா், அறக்கட்டளை உறுப்பினா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் செய்தனா்.