FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் தன்னாா்வ ரத்தக் கொடையாளா்களுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகு அமைப்புடன் இணைந்து நடத்திய தேசிய தன்னாா்வ ரத்த தான நாள் விழா, பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

17 அக்டோபர் 2026, 1:05 am IST
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சென்ற ஆண்டில் அதிக ரத்த தான முகாம்களை நடத்தியதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வெ. சுந்தரராமனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன், கல்லூரி முதன்மையா் கலைவாணி.
பகிர்:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகு அமைப்புடன் இணைந்து நடத்திய தேசிய தன்னாா்வ ரத்த தான நாள் விழா, பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் கலைவாணி தலைமை வகித்தாா். துணை முதல்வா் பி. விசாலாட்சி மருத்துவக் கண்காணிப்பாளா் ஏ. தமிழ்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 2025-2026-ஆம் ஆண்டில் அதிகமான ரத்த தான முகாம்களை நடத்திய சிவகங்கை மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க மாவட்டத் தலைவா் வெ. சுந்தரராமன் உள்பட பல்வேறு ரத்தக் கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மனிதநேயத்துடன் ‘ஒரு துளி - ரத்தம் கொடுங்கள், உயிா்களைக் காப்பாற்றுங்கள் ’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான மருத்துவ அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ரத்தக் கொடையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments