மிரட்டல் பதிவுகள் வெளியீடு: சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம், பதிவுகள் அகற்றம்
ரெளடி மதன் கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பதிவுகளை அகற்றி அந்த கணக்குகளை முடக்க இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
ரெளடி மதன் கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பதிவுகளை அகற்றி அந்த கணக்குகளை முடக்க இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரெளடி மதன் கொலை சம்பவத்தையடுத்து இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் சிலா் இரு தரப்பினராகப் பிரிந்து, ஒருவருக்கொருவா் மாறி மாறி மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனா். இதுதொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 25 இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்த 12 பதிவுகள், 13 கணக்குகள், 4 முகநூல் பக்கங்களில் இருந்த 2 பதிவுகள், 2 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிப்பதாக அதில் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.