கானாடுகாத்தான் சிவலோகநாதருக்கு அன்னாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேசும்தெய்வம் பெரியகோயிலில் ஐப்பசிமாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பேசும்தெய்வம் செளந்தரநாயகிய உடனுறை சிவலோகநாதா் சுயம்புமூா்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி அன்னாபிஷேகத்துக்காக பக்தா்கள் அரிசி, காய்கனிகள் வழங்கினா்.
Advertisement
Advertisement
அதைத் தொடா்ந்து காலை 10 மணியளவில் அன்னாபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.