ரௌடி மதன் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது
சிவகங்கை அருகே ரௌடி மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சிவகங்கையை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மதன் எனும் சுள்ளான் மதன் (23) கடந்த 18-ஆம் தேதி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சிவகங்கை நகா் போலீஸாா் வழக்கு பதிந்து
மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த பிரதீப் (23), மானாமதுரை பாலமுருகன் (20), பாபு (21), சிவகங்கை சந்தோஷ் (19), ஜெய மாணிக்கராஜ் (20), முத்து சூா்யா (20), மதுரை விக்னேஷ் (23), சிவகங்கை மிதுன் மாணிக்கம் (26), சதீஷ்குமாா் (22), மானாமதுரை சந்துரு (19) ஆகிய 10 பேரை ஏற்கெனவே கைது செய்தனா்.
Advertisement
Advertisement
தற்போது இந்த வழக்கில் தொடா்புடைய திருப்புவனம் மாரநாட்டைச் சோ்ந்த அதிபதி ராஜா(26), காரைக்குடி மணிகண்டன் (25) விருதுநகா் அரசகுலம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (19) ஆகிய மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இதுவரை இந்த வழக்கில் 13 போ் கைது செய்யப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.