FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பெண் தற்கொலை வழக்கு: கணவா் உள்பட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவா், மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

29 அக்டோபர் 2026, 1:05 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவா், மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி அருகேயுள்ள காரையூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாவைச் சோ்ந்தவா் பாண்டி கண்ணன் (44), இவரது மனைவி வித்யா (26).

இந்த நிலையில், வித்யாவுக்கு, பாண்டி கண்ணனும், இவரது தாய் ரேவதியும் (64) வரதட்சிணை கொடுமை செய்தாா்களாம். இதனால், வித்யா கடந்த 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் பாண்டி கண்ணன், ரேவதி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் லோக அரசியும், விசாரணை அதிகாரியாக காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துச்சாமியும் பணியாற்றினா்.

இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை விரைவு மகளிா் நீதிமன்ற பொறுப்பு சிறப்பு நீதிபதி ஏ. ராமலிங்கம், பாண்டி கண்ணன், இவரது தாய் ரேவதி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments