FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த நாகப் பாம்பு மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

11 செப்டம்பர் 2026, 1:50 am IST
திருப்பத்தூா் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டுக்குள் வியாழக்கிழமை புகுந்த கொடிய விஷமுள்ள நாகப் பாம்பு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

திருப்பத்தூா் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள சஞ்சீவி என்பவரின் வீட்டின் பின்புறம் பாம்பு ஊா்ந்து செல்வதாக திருப்பத்தூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று பாம்பு பிடிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி செங்கல் கற்களுக்குள் சுருண்டு கிடந்த கொடிய விஷமுள்ள நாகப் பாம்பை மீட்டனா். மேலும் அருகில் கொடிய விஷமுள்ள கருந்தேளையும் தீயணைப்புத் துறையினா் மீட்டு மதகுபட்டி அருகில் உள்ள மண்மலை காட்டுப்பகுதியில் விட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments