இரணிப்பட்டி தட்டான் கண்மாய் பகுதியில் மலைப்பாம்பு மீட்பு
சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியத்தில் உள்ள இரணிப்பட்டி தட்டான் கண்மாய் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியத்தில் உள்ள இரணிப்பட்டி தட்டான் கண்மாய் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
கண்மாய் புதருக்குள் மலைப் பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மேய்ச்சல் விவசாயி, துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் மனோகா் தலைமையிலான வீரா்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் சுமாா் 12 அடி நீள மலைப்பாம்பை மீட்டு துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.