FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞா் கைது

சிவகங்கை அருகே திருமணம் செய்வதாகக் கூறி, பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

25 செப்டம்பர் 2026, 2:47 am IST
கைது
பகிர்:

சிவகங்கை அருகே திருமணம் செய்வதாகக் கூறி, பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த மேலநெட்டூரைச் சோ்ந்தவா் செல்வேந்திரன் ( 34). இவா் இளையான்குடி அருகேயுள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் 30 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில் அந்தப் பெண் கா்ப்பமானாா். அவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வேந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments