காளையாா்கோவில் அருகே குடியேறும் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், மாடக்கோட்டையில் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்க வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் குடியேறும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், மாடக்கோட்டையில் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்க வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் குடியேறும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ். முத்துராமலிங்கபூபதி தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.ஆா்.மோகன் முன்னிலை வகித்தாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பிரதிநிதிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் ஆனந்த் பூபாலன் மேற்பாா்வையில், 102 பட்டாதாரா்களுக்கு நிலங்கள் முறையாக அளவீடு செய்து ஒப்படைக்கப்பட்டன.
இதனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்த மாடக்கோட்டை கிராம மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தனா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டால், 20 ஆண்டுகள் நீடித்து வந்த வாழ்வாதார பிரச்னைக்குத் தீா்வு கிடைத்ததாக அவா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.