இயற்கை விவசாய பயிற்சி
தேனி அருகே ஸ்ரீரங்காபுரத்தில் பாரதீய கிசான் சங்கம் சார்பில் இயற்கை முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி அருகே ஸ்ரீரங்காபுரத்தில் பாரதீய கிசான் சங்கம் சார்பில் இயற்கை முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு பாரதீய கிசான் சங்க அகில இந்திய பொறுப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஆர்.நாட்ராயன், பண்ணைப்புரம் இயற்கை வேளாண்மை ஒருங்கிணைப்பாளர் வி.சண்முகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர் மேலாண்மை, மண் பாதுகாப்பு, மூலிகை பூச்சி விரட்டிகள், பஞ்சகவ்யம், மண்புழு உரம் உற்பத்தி, நாட்டுப் பசு வளர்ப்பு ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.