FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கார் மீது பேருந்து மோதி 7 பேர் காயம்

ஆண்டிபட்டி அருகே கார் மீது பேருந்து மோதியதில், காரில் பயணம் செய்த 7 பேர் காயமடைந்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

ஆண்டிபட்டி அருகே கார் மீது பேருந்து மோதியதில், காரில் பயணம் செய்த 7 பேர் காயமடைந்தனர்.

மதுரை, எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (50). இவர் திங்கள்கிழமை மதுரையில் இருந்து தேனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் சென்ற கார் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்புறம் வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த ராஜபாண்டி மற்றும் அதில் பயணம் செய்த மாரியம்மாள், செல்லப்பாண்டி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டிபட்டி போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments