தேவாரம், போடி கிராமங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி
தேவாரம், போடி கிராமங்களில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேவாரம், போடி கிராமங்களில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போடி அருகே சிலமலை முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் ராஜதுரை (8). 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு அறிகுறி காணப்பட்டது. இதனையடுத்து போடி அரசு மருத்துவமனையிலும், தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் தேவாரம் அருகே மறவபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகள் சத்தியா (5). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் போடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பரிசோதனையில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி காணப்பட்டது.
இதனையடுத்து மாணவி சத்தியா போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் போடி பகுதியில் கொசுக்களை முழுமையாக ஒழிக்கவும், சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதார துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.