முகப்பு
தேனி

பெரியகுளத்தில் தடுப்பூசி செலுத்த காத்திருந்த முதியவர்கள்: கரோனா பரவும் அபாயம்

பெரியகுளத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கரோனா பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
தடுப்பூசி செலுத்த காத்திருந்த முதியவர்கள்.
பகிர்:

பெரியகுளத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கரோனா பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் திங்கள்கிழமையன்று 18 - 44 வயதுடையவர்களுக்கு 4 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

அரசு அலுவலர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் காலையில் இருந்து வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

முறையாக டோக்கன் வழங்கியிருந்தால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டு இருக்காது. ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி கூடுவதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே முறையாக பதிவு செய்து, கூட்ட நெரி சலின்றி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →