தேனி

கூடலூர் செல்ல பேருந்து இல்லாமல் கம்பத்தில் பயணிகள் இரவில் காத்திருப்பு

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூருக்கு செல்ல இரவு பல மணி நேரங்களாக பேருந்து இல்லாமல் ஆண், பெண், குழந்தைகள் காத்திருந்து, சிரமத்திற்கு ஆளாகினர்.

தேனி மாவட்டம் கூடலூர், கேரள எல்லையை இணைக்கும் பகுதியாக உள்ளது.  தற்போது வீரபாண்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரத்தை பொதுமக்கள் வீரபாண்டி மாரியம்மன் கோயிலுக்கு சென்று வருவார்கள்.

வெள்ளிக்கிழமை கோயில் தேரோட்டம் என்பதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். திருவிழாவை முடித்து விட்டு கூடலூர் மற்றும் அருகே உள்ள ஊர்களைச் சேர்ந்த  ஆண், பெண், குழந்தைகள் ஊர்களுக்கு செல்ல பல மணிநேரம் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதுபற்றி ரோந்து காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. கம்பம் பணிமனை போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பேருந்துகளை இயக்க செய்தனர்.

இதுபற்றி கூடலூர் மக்கள் மன்ற செயலாளர் ப.புதுராஜா கூறியது, விழா காலங்களில் போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி பயணி மற்றும் பக்தர்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT