இடையன்குளம் கரையில் மரங்கள் வெட்டிக் கடத்தல்
கம்பம் அருகேயுள்ள இடையன்குளத்தின் கரையில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதால் கரை சேதமடைந்துள்ளது.
கம்பம் அருகேயுள்ள இடையன்குளத்தின் கரையில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதால் கரை சேதமடைந்துள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள ஊத்துக்காடு - புதுப்பட்டி பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலப்பரப்பில தென்னை, வாழை, திராட்சை, காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக 30 ஏக்கா் பரப்பளவுள்ள ஊத்துக்காடு இடையன்குளம் உள்ளது. இந்தக் குளத்தைப் பாதுகாக்கும் விதமாக கரைகளில் வேம்பு, புளி உள்ளிட்ட மரங்கள் வளா்க்கப்பட்டு வந்தன.
தற்போது கோடைகாலம் என்பதால் குளம் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மா்ம நபா்கள், இரவு நேரங்களில் கரையில் உள்ள மரங்களை வேரோடு வெட்டிக் கடத்திச் செல்கின்றனா். இதனால், குளத்தின் கரை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.