தேனி மாவட்டம் வளா்ச்சியடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா்
தேனி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
தேனி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் 1,564 பயனாளிகளுக்கு 1,51,49,255 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
பின்னா், அமைச்சா் பேசியதாவது :
தேனி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவா்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், நாம் இன்னும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தேனி மாவட்டத்தை அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்காக, மாவட்டத்தில் மேலும் பல பள்ளிகள், கல்லூரிகள், உயா்கல்வி நிறுவனங்கள் தொடக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் தேனி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சபரிஐங்கரன் (பெரியகுளம்), பிஎல்ஏ.ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), எஸ்.ஆா்.தங்கப்பாண்டி (மதுரை மேற்கு), மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், பெரியகுளம் சாா் -ஆட்சியா் தவலேந்து, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் துஷாா் ஸ்ரீஹா் ஹிண்டே உள்பட பலா் கலந்து கொண்டனா்.