FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கு பாராட்டு விழா

விருதுநகரில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

விருதுநகரில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்.

    விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது.

  விருது பெற்ற விருதுநகர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெளந்தரி, ஹாஜி பி.செய்யது முகமது மேல்நிலைப்பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் இப்ராஹிம், ஜமீன்சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் முத்து ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

Advertisement

Advertisement

விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார்.

 மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று நல்லாசிரிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

     இதில், விருதுநகர் அதிமுக நகர செயலாளர் நயினார் முகமது, ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகராட்சி உறுப்பினர் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments