பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணன்கோவில், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த நடராஜன் மனைவி அனிதா. கணவர் இறந்துவிட்டார். அனிதா சீலநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
சனிக்கிழமை மதியம் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்குச் சென்றுள்ளார். திரும்பி திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது, வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த மரக்கதவையும் உடைத்துச் சென்ற மர்ம நபர் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் 8 ஜோடி வெள்ளி கொலுசுகளைத் திருடிச் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இது குறித்து ஆசிரியை அனிதா, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.