FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பள்ளிச் சிறுவன் மீது பைக் மோதல்: மூவர் மீது வழக்கு

சிவகாசி அருகே முன்பகை காரணமாக, பள்ளிச் சிறுவன் மீது இரு சக்கர வாகனத்தை மோதவிட்டு, காயமேற்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

சிவகாசி அருகே முன்பகை காரணமாக, பள்ளிச் சிறுவன் மீது இரு சக்கர வாகனத்தை மோதவிட்டு, காயமேற்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி அருகே நடுவப்பட்டியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (33). இவரது குடும்பத்துக்கும், வீரமணி என்பவரின் குடும்பத்தினருக்கும் முன்பகை இருந்துள்ளது.
இந்நிலையில், நடுவப்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் மாரீஸ்வரன் மகன் வீரசிங்கம் (8), திங்கள்கிழமை அப் பள்ளி முன்பாக விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மொபட்டில் சென்றுகொண்டிருந்த வீரமணியின் மகன்கள் வீரசிங்கம், கணேஷ்குமார் மற்றும் மகள் வீரலட்சுமி ஆகியோர் வேண்டுமென்றே மாரீஸ்வரன் மகன் மீது மோதியதில், சிறுவன் காயமடைந்தான். மேலும், இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். 
காயடைந்த சிறுவன், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான்.இது குறித்து மாரீஸ்வரன் அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸார் வீரசிங்கம், கணேஷ்குமார் மற்றும் வீரலட்சுமி ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments