விருதுநகர் மாவட்டத்தில் ஆக.13-இல் உள்ளூர் விடுமுறை
விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அரசு ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் வகையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.