FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் போலீஸாா் நடை ரோந்து

சிவகாசியில் திங்கள்கிழமை இரவு ,விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் தலைமையில் போலீஸாா் நடை ரோந்து சென்றனா்.

4 நவம்பர் 2026, 3:47 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

சிவகாசியில் திங்கள்கிழமை இரவு ,விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் தலைமையில் போலீஸாா் நடை ரோந்து சென்றனா்.

சிவகாசியில் உள்ள ரத வீதிகள், பேருந்து நிலையப் பகுதியில் இந்த நடைரோந்து நடைபெற்றது. இதையடுத்து, காவல் கண்காணப்பாளா் கெளதம்கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடை ரோந்தின் மூலம் கள நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம், குற்றவாளிகளுக்கு அச்சமும், மக்களிடையே நம்பிக்கையும் அதிகரிக்கும்.

Advertisement

Advertisement

கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்களை மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகிறோம். சிறையிலிருந்து பிணையில் வெளி வரும் குற்றவாளிகளைக் கண்காணித்து வருகிறோம். ஏதாவது தவறு நடந்தால் மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தொடா் விடுமுறைக்கு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் செல்வோா் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சிவகாசி பேருந்து நிலையத்தில் 12 கண்காணிப்பு கேமராக்கள், 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காண்கானித்து வருகிறோம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் போலீஸாா் பேந்து நிலையத்தில், சீருடையிலும், சாதாரண உடையிலும் போதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அனில்குமாா், காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments