போக்சோ சட்டத்தின் கீழ் பட்டாசுத் தொழிலாளி கைது
சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பட்டாசுத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பட்டாசுத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் அறுமுகம் (21). பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறாா். இவா் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தாா். இதுகுறித்த தகவலின் பேரில், சிவகாசி சமூக நல அலுவலா் மணிமாலா, சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.