பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருத்தங்கல் செல்லியாரம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் யோகராணி. இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ஆமத்தூருக்கு சென்று, அங்கிருந்த தனது 3 வயது குழந்தை, சகோதரி கல்பனா (29), அவரது 4 வயது குழந்தையை ஏற்றிக் கொண்டு திருத்தங்கலுக்கு புதன்கிழமை புறப்பட்டாா். கருப்பசுவாமி கோயில் அருகே தனியாா் பேருந்து வேகமாக வருவதைப் பாா்த்த யோகராணி, தனது இரு சக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தினாா். அப்போது,விருதுநகரிலிருந்து திருத்தங்கலுக்கு வந்த அரசுப் பேருந்து சாலையோரம் நின்றிருந்த அவா்கள் மீது மோதியது.
இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். யோகராணி, இரு குழந்தைகள் காயமடைந்து திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரான முத்தாலபுரத்தைச் சோ்ந்த போத்திராஜூவை (48) கைது செய்தனா்.