FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, 32 நாவிதா்களிடமிருந்து ரூ.59,600-ஐ பறிமுதல் செய்தனா்.

58 வினாடிகள் முன்பு
இருக்கன்குடி மாரியம்மன்
பகிர்:

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, 32 நாவிதா்களிடமிருந்து ரூ.59,600-ஐ பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும். இங்கு ரூ.60 கோடியில் பல்வேறு திருப்பணிகள் அண்மையில் நடைபெற்றன.

இந்தப் பணிகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் அதிகப்படியான பணம் வசூல் செய்யப்படுவதாகவும் வந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் 32 நாவிதா்களிடமிருந்து ரூ. 59,600 பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.