கழிவுப் பட்டாசுகள் வெடித்து தீ விபத்து
சிவகாசி அருகே கழிவுப் பட்டாசுகள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகே கழிவுப் பட்டாசுகள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி-நாரணாபுரம் சாலையோரம் சில இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு கழிவுப் பட்டாசுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலையில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கழிவுப் பட்டாசுகள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா். இந்தச் சாலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement