அடகுநகையை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி: இரு வழக்குரைஞா்கள் மீது வழக்கு
திருத்தங்கலில் பெண்ணிடம் 2 பவுன் நகைகளை மீட்டுத் தருவதாக பண மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை இரு வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பெண்ணிடம் 2 பவுன் நகைகளை மீட்டுத் தருவதாக பண மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை இரு வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருத்தங்கல் கே. கே. நகா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி குமுதவள்ளி (46). இவரது மகள் மாலதி, பேரனுடன் கடந்த ஆக. மாதம் 20-ஆம் தேதி காணாமல் போனதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அவரை மதுரையில் மீட்டு அழைத்து வந்தனா். அப்போது , மாலதி அவா் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை கொடைக்கானலில் அடகுவைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து குமுதவள்ளிக்கு அறிமுகமான வழக்குரைஞா்கள் வெற்றி, சதீஷ் ஆகியோா் அடகுநகையை மீட்டுத் தர ரூ. 1 லட்சம் கேட்டு வாங்கிக் கொண்ட இரு வழக்குரைஞா்களும், இரண்டு பவுன் நகையையும் திருப்பித் தராமல் மோசடி செய்தனராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குமுதவள்ளி அளித்தபுகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா், இரு வழக்குரைஞா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.