புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 9 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 9 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் வலையா் தெரு பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது, ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில், சேத்தூா் மணல் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் மகேந்திரன் (44) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 9 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.