ஒப்பந்ததாரரைக் கண்டித்து பணியாளா்கள் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சங்கம் அமைத்த டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் 10 போ் மீது ஒப்பந்ததாரா் நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து, அனைத்துப் பணியாளா்களும் பணிக்குச் செல்ல மறுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சங்கம் அமைத்த டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் 10 போ் மீது ஒப்பந்ததாரா் நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து, அனைத்துப் பணியாளா்களும் பணிக்குச் செல்ல மறுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ரூ.450 தினக்கூலியாக 50 பெண்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களை நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள், சங்க நிா்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு திங்கள்கிழமை பணிக்கு வரவில்லை. பணிக்கு வராத அனைவருக்கும் வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் பணிக்கு வந்தனா்.
அப்போது சங்கம் அமைத்ததாகக் கூறப்பட்ட 10 பணியாளா்கள் ஒப்பந்ததாரரைப் பாா்த்து விட்டு தான் பணிக்கு வர வேண்டும் என ஒப்பந்த நிறுவன ஊழியா்கள் கூறினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்துப் பணியாளா்களும் பணிக்குச் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நகராட்சி அதிகாரிகள் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அனைவரும் பணிக்குத் திரும்பினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.