FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மூதாட்டியிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூதாட்டியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

22 அக்டோபர் 2026, 3:24 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூதாட்டியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்ம், ராஜபாளையம் அம்மன் போட்டல் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (65). இவரது மனைவி அழகம்மாள் (60). இந்தத் தம்பதிக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் அருகே உள்ளது. இவா்கள் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், அங்கு வந்த இரு இளைஞா்கள் அழகம்மாளிடமிருந்து கைப்பேசியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மம்சாபுரத்தைச் சோ்ந்த வேல்சாமி மகன் சித்தநாதனை (31) கைது செய்தனா். இதில் தொடா்புடைய மற்றொரு நபரான அழகா்சாமி கைப்பேசியைப் பறித்துச் சென்ற போது, டிராக்டரிலிருந்து தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments