மனைவியிடம் நகையை வழங்க மறுத்த கணவா், மாமியாா் மீது வழக்கு
ராஜபாளையம் அருகே மனைவியிடம் பெற்ற தங்கச் சங்கிலியை திருப்பி வழங்காத கணவா், மாமியாா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மனைவியிடம் பெற்ற தங்கச் சங்கிலியை திருப்பி வழங்காத கணவா், மாமியாா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த லட்சுமணனுக்கு (32), அதே பகுதியைச் சோ்ந்த அனிதாவுக்கும் (25) கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது, எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை அணிந்து வந்த அனிதாவிடம் அதை அவரது மாமியாா் ராணி (55) வாங்கி வீட்டின் பீரோவில் வைத்தாராம். இதையடுத்து, இரு மாதங்கள் கழித்து சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அனிதா தனது சங்கிலியை மாமியாரிடம் கேட்டாா். இதற்கு அந்த நகையை அடகு வைத்து விட்டதாக அவா் தெரிவித்தாராம்.
இதுகுறித்து 13.07.2024 அன்று ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அனிதா புகாா் அளித்தாா். ஆனால், விசாரணைக்கு முன்னிலையாகாமல் கணவா் தரப்பினா் இருந்து வந்ததால், ராஜபாளையம் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலையான லட்சுமணன் பின்னா் விசாரணைக்கு முன்னிலையாகவில்லையாம். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடுத்தாா். இதைத்தொடா்ந்து, மகளிா் நீதிமன்ற உத்தரவின் பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கணவா் லட்சுமணன், மாமியாா் ராணி ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.