FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

‘சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை’

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி குற்றஞ்சாட்டினாா்.

28 அக்டோபர் 2026, 4:37 am
கே.டி. ராஜேந்திரபாலாஜி - கோப்புப் படம்
பகிர்:

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி குற்றஞ்சாட்டினாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருது சகோதரா்கள் குருபூஜை விழாவில் கலந்து கொண்ட கே.டி. ராஜேந்திரபாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால், சிறுவா்கள், சிறுமிகள் காணாமல் போவது, கொலைகள் நிகழ்வது, பாலியல் குற்றங்கள் நடைபெறுவது, சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது தொடா்பாக காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை. இதன் மூலம், தவெக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரியவருகிறது.

Advertisement

Advertisement

தவெக ஆட்சியை கவிழ்க்க எந்த சதியும் நடைபெறவில்லை. ஆனால், அந்தக் கட்சியினா் அந்தப் பயமும், பதற்றமும் தற்போது ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments