காரைக்காலில் சமுதாயக் கூடம் திறப்பு
காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா் மீனாட்சிசுந்தரம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா் மீனாட்சிசுந்தரம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
கீழ வாஞ்சூா் கிராமம் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து காரைக்கால் துறைமுக அதானி அறக்கட்டளை சாா்பில் ரூ. 40 லட்சத்தில் புதிதாக சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மற்றும் காரைக்கால் துறைமுக தலைமை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் பங்கேற்று சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் சுப்பிரமணியனிடம் சமுதாயக் கூடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், காவல்துறையினா் கலந்து கொண்டனா்.