நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு
காரைக்காலில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, வர்த்தகர்கள் சனிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, வர்த்தகர்கள் சனிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் நகராட்சி நிர்வாகம் சார்பில், வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகம், சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை கடைகளை அடைத்து போராட்டம் நடத்த வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.
இதன்படி, சனிக்கிழமை காலை முதல் காரைக்கால் நகரில் கடைகள் மூடப்பட்டிருந்தன. சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள், வர்த்தகர்கள் இணைந்து, நகராட்சி ஆணையரைக் கண்டித்து பேருந்து நிலையம் முதல் ஆட்சியரகம் வரை பேரணி நடத்தி, ஆட்சியரகத்தில் அவர் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தனர். கடையடைப்புப் போராட்டத்தால் சனிக்கிழமை திருநள்ளாறு செல்வதற்காக காரைக்கால் வந்த வெளியூர் பக்தர்கள் காலை, மதிய உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கின. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
Advertisement
Advertisement
நகராட்சி ஆணையர் பேட்டி : காரைக்கால் நகராட்சி ஆணையர் என்.காந்திராஜன் கூறியது : ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து முறையாக முன்னறிவிப்பு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்புகள் தொடர்ந்ததால், ஆட்சியரின் முறையான அனுமதியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அக்டோபர் முதல் வாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெறும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.