முகப்பு
நாகப்பட்டினம்

கொள்ளிடம்: 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை அதிமுக வேட்பாளர் வெற்றி

சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் 110 வாக்குகள் அதிகம் பெற்று சுயேச்சை அதிமுக வேட்பாளர் மஞ்சு விஜயகுமார் வெற்றி பெற்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

சீர்காழி: சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் 110 வாக்குகள் அதிகம் பெற்று சுயேச்சை அதிமுக வேட்பாளர் மஞ்சு விஜயகுமார் வெற்றி பெற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தியம்பேட்டை 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த தனலட்சுமி என்பவர் வெற்றி பெற்று பதவியில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். 

இதனையடுத்து கடந்த 9-ம் தேதி அன்று 16-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணியானது கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை துவங்கியது. 3 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக-1536 வாக்குகளும், சுயேச்சை (அதிமுக)-1646 வாக்குகளும், சுயேச்சை (பாஜக)-65 வாக்குகளும் பெற்றது.

முடிவில் அதிமுக 110 வாக்குகள் அதிகம் பெற்று சுயேச்சை (அ.தி.மு.க) வேட்பாளர் மஞ்சு விஜயகுமார் வெற்றி பெற்றார். இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.

முழு கட்டுரையைப் படிக்க →