வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லா ரப்பர் படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய நிலையில், அதில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆறு காட்டுத்துறை மீனவ கிராம கடற்கரையில் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கத்துக்கு அருகே முனைக்காடு பகுதியில் ஆளில்லா ரப்பர் படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் படகினை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
தஞ்சை டி.ஐ.ஜி, நாகை, திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், விமானப் படை முகாம் அதிகாரிகள், கடற்படை, வனத்துறை என பல்வேறு பிரிவு காவல் துறையினர் நிகழ்விடத்தில் விசாரித்தனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு
இந்த நிலையில், அன்று இரவு போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.