100 நாள் வேலைத் திட்டம்: நிலுவைத் தொகை கோரி சாலை மறியல்
வேதாரண்யம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு நான்கு மாத ஊதியத் தொகையை வழங்க கோரி, புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு நான்கு மாத ஊதியத் தொகையை வழங்க கோரி, புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தகட்டூா் கடைவீதி பட்டுக்கோட்டை - வேதாரண்யம் பிரதான சாலையில் நடைபெற்ற மறியலுக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் அ. பாலகுரு தலைமை வகித்தாா்.
கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், நிா்வாகக் குழு உறுப்பினா் த.நாராயணன், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் கே. வைத்திலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியத் தலைவா் காசி. அருள் ஒளி, நிா்வாகிகள் ப. கோவிந்தராஜ் , சுப்பிரமணியன், மு.ஜெயா, ராஜதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய பயனாளிகளுக்கு ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், சிங்காரவேலு உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஊதிய தொகையை பயனாளிகள் கணக்கில் வரவு வைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கினா். இதையடுத்து சாலை மறியல் விலகிக் கொள்ளப்பட்டது.