"மது ஒழிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பெரியார்'
மது ஒழிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் என்றார் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மைய இணை இயக்குநர் க. அன்பழகன்.
மது ஒழிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் என்றார் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மைய இணை இயக்குநர் க. அன்பழகன்.
மன்னார்குடியில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்மையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: சாதி, மதம், மூடநம்பிக்கைகளை ஒழித்தால்தான் பகுத்தறிவும், சுயமரியாதையும் உருவாகும் என்றவர் பெரியார். ஆணுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என முழங்கியதுடன், பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
மகாத்மா காந்தி அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை ஏற்று தனக்கு சொந்தமான தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி எரித்ததுடன், போராட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தனது மனைவி, சகோதரி ஆகியோரை களம் இறங்கி போராட செய்தவர் பெரியார் என்றார். ருக்மணிபாளையம் அண்ணா சிலையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட 10 சுமை வேனிலும் தட்டு ரிக்ஷாவிலும் பெரியார் பன்முக தோற்றம் உருவபடம் ஊர்வலத்தை தி.க. மாநில பொதுச்செயலர் இரா.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். கூட்டத்துக்கு தி.க. மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை வகித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.