திருவாரூர்

கூத்தாநல்லூரில் சரிந்து விழும் நிலையில் விநாயகர் கோயில்

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பிரதான சாலையில் சரிந்து விழக்கூடிய நிலையில் உள்ள விநாயகர் கோயிலை பாதுகாக்கக் கோரி பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட, திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையில், ராமானுஜ காலனி நுழைவு வாயிலில் கலிதீர்த்த ராஜ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. மிகப் பழமையான இக்கோயில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. மேலும், வெண்ணாற்றிலிருந்து பிரிந்து வரக்கூடிய, பாசன வாய்க்கால், கழிவு நீர் செல்லும் சாக்கடையாக மாறியுள்ளது.

இந்த கழிவு நீர் சாக்கடை கோயிலின் பின்புறத்தில் ஓடுகிறது. இந்த கழிவு நீர் சாக்கடையால், விநாயகர் கோயிலின் அடிப்பாகத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோயிலின் கீழ் பகுதியில் சிமிண்ட் காரைகள் பெயர்ந்து, விநாயகர் கோயில் சரிந்து விழக் கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.

கலித்தீர்த்த விநாயகர் கோயில் முழுவதுமாக சேதம் அடையும் முன்பே, பாசன வாய்க்காலாக இருந்து கழிவு நீர் சாக்கடைய மாறியுள்ள வாய்க்காலை பார்வையிட வேண்டும். தொடர்ந்து, வாய்க்கால் தூர் வாரப்பட்டு, வாய்க்காலில் மிதந்தும், குவிந்தும் கவனிப்பாரற்று இருக்கும் கழிவுகளை அகற்றிட வேண்டும். பழுதடைந்துள்ள விநாயகர் கோயிலை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT