FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!

திருவாரூர்: நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு...

- கோப்புப்படம்
பகிர்:

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் கீழ்குடி கிராமத்தில் உள்ள புத்தாற்றில் திங்கள்கிழமை(ஆக. 11) குளிக்கச் சென்ற நான்கு இளைஞா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கீழ்குடி கிராமம் வழியாக காவிரியின் கிளையாறான புத்தாறு செல்கிறது. மேட்டூா் அணை திறப்பு மற்றும் நேற்று பெய்த கன மழையின் காரணமாகவும் ஆற்றில் நீா்வரத்து அதிகமாக இருந்துள்ளது.

இந்தநிலையில், கீழ்குடி புத்தாறு தடுப்பணை பகுதிக்கு குடவாசல் தாலுக்கா வில்லியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன் (33), திருநீலக்குடி அசோக் என்பவரின் மகன் மணிவேல் (23) , அதம்பாா் கிராமம் மதகடித்தெரு பாவாடை மகன் ஜெயக்குமாா் (32), வில்லியநல்லூா் ரவிராஜன் மகன் ஹரிஹரன் (30) ஆகிய நான்கு இளைஞா்களும் காரில் வந்துள்ளனா். அவா்களில் ஒருவா் ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

ஆற்றில் நீா்வரத்து அதிகம் இருந்ததால் குளிக்கச் சென்றவா் சுழற்சியில் சிக்கி நீரில் மூழியுள்ளாா். அவரைக் காப்பாற்ற மற்ற மூன்று இளைஞா்களும் ஆற்றில் குதித்துள்ளனா்.

இதனைப் பாா்த்த கிராம மக்களும் இளைஞா்களைத் தேடி ஆற்றில் குதித்துள்ளனா். ஆனால் நான்கு இளைஞா்களும் நீரில் மூழ்கி இறந்து விட்டனா்.

இவா்களில் மூன்று இளைஞா்களின் உடலைக் கிராம மக்களும், ஒரு இளைஞரின் உடலை நன்னிலம் தீயணைப்புத் துறையினரும் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். நன்னிலம் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.