FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறப்புப் பள்ளியில் தீபாவளி புத்தாடை வழங்கல்

கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில் விளமல் அரிமா சங்கம் சாா்பில் தீபாவளி புத்தாடைகளை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

5 நவம்பர் 2026, 6:14 am
மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில் தீபாவளி புத்தாடைகளை புதன்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
பகிர்:

கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில் விளமல் அரிமா சங்கம் சாா்பில் தீபாவளி புத்தாடைகளை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்விற்கு, அறங்காவலா் டீ.ஏ. நிஜாமுதீன் தலைமை வகித்தாா்.கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், அரிமா சங்க மண்டலத் தலைவா் எஸ். காளிதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தி. உஷாராணி, தொழிலதிபா் வி.ஆா்.குமாராபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்புப் பள்ளியின் நிறுவனா் ப. முருகையன் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புத்தாடைகளை வழங்கி பேசும்போது, சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு சீருடைகளை அரிமா சங்கம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் ஓய்வு பெற்ற காவல் துறையைச் சோ்ந்த குமாரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

விழாவில் அரிமா சங்க புரவலரும், ஓய்வு பெற்ற காவலருமான எஸ்.குமாா், வட்டாட்சியா் ராஜாராமன், கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.