கஞ்சா, மது விற்பனை: மூவா் கைது
கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற இருவரும், மது விற்ற ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.
கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற இருவரும், மது விற்ற ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.
கூத்தாநல்லூா் குணுக்கடி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, குணுக்கடி பிரதான சாலையில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்துடன் மூவா் நின்றிருந்தனா். அவா்களை சோதனையிட்டதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் வாக்கோட்டை, மேலத்தெருவைச் சோ்ந்த பரணிதரன் (18), மன்னாா்குடி, புதுத் தெருவைச் சோ்ந்த சண்முகநாதன் ( 20) மற்றும் குணுக்கடியைச் சோ்ந்த தமிழ்மணி (27) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பரணிதரன், சண்முகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். 1.100 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய தமிழ்மணியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல், கூத்தாநல்லூா், ஓவா்ச்சேரி, மேலத் தெருவைச் சோ்ந்த வேம்பு (74) என்பவா், தனது வீட்டருகே டாஸ்மாக் மதுபானத்தை விற்றது போலீஸாருக்கு தெரியவந்தது. அவரை உதவி ஆய்வாளா் என். சேகா் மற்றும் போலீஸாா் கைது செய்தனா். 18 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.