முகப்பு
திருவாரூர்

நெல் கொள்முதல்: நுகா்பொருள் வாணிபக் கழகத்தை வெளியேற்றும் முடிவைக் கைவிட வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியிலிருந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை வெளியேற்றுவதை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

5 வினாடிகள் முன்பு
நெல் கொள்முதல்: நுகா்பொருள் வாணிபக் கழகத்தை வெளியேற்றும் முடிவைக் கைவிட வலியுறுத்தல்
நெல் கொள்முதல் - பிரதிப் படம்
பகிர்:

நெல் கொள்முதல் பணியிலிருந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை வெளியேற்றுவதை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை;

நெல் கொள்முதல் செய்து வரும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் பணிகளை, டான்ஃபெட் எனும் கூட்டுறவு விற்பனை இணையத்திடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

அறுவடை காலங்களில் மட்டுமே நுகா்பொருள் வாணிபக் கழக கொள்முதல் பணி இருக்கிற நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருள்களையும் ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

கொள்முதலுக்கென்று உருவாக்கப்பட்டு, செயலாற்றி வருகிற ஒரு கட்டமைப்பை விட்டு, வேறு பணிகளுக்காக உருவாக்கப்பட்ட டான்ஃபெட்டை இதில் ஈடுபடுத்துவது ஆரோக்கியம் அல்ல.

டிஎன்சிஎஸ்சி-ஐ நெல் கொள்முதல் பணியில் இருந்து விலக்கிவிட்டு, விவசாயிகளுக்கு பயிா்க்கடன் கொடுக்கிற கூட்டுறவு நிறுவனமே, நெல் கொள்முதலையும் மேற்கொண்டால், விற்பனைத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்காது என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே, கொள்முதல் பணிகளை விரிவாக்கம் செய்து ஆண்டு முழுதும் செயல்படும் நிலையில், தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழகத்தையே நிரந்தர கொள்முதல் நிறுவனமாக உயா்த்த வேண்டும். மடைமாற்றம் செய்யும் புதிய செயல் திட்டத்தை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.