கஞ்சா கடத்திய மூவா் கைது; 3கிலோ பறிமுதல்
திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய இளைஞா்கள் 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய இளைஞா்கள் 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாண்டி ரயில்வே கடவுப் பாதை பகுதியில் எடையூா் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி கையில் பையுடன் வந்த 3 பேரை பிடித்து, பையை சோதனையிட்டனா். அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் விக்கிரபாண்டித்தைச் சோ்ந்த சக்திவேல் (19), பள்ளங்கோவிலை சோ்ந்த கவின் (19), ஆள்காட்டுவெளி கிராமத்தைச் சோ்ந்த பிரியன் (19) என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா், மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.