FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெங்கு: விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவு

தில்லியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தில்லியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தில்லி அரசு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத் துறைச் செயலர், சுகாதாரப் பணிகள் இயக்குநர், கோட்ட இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:

தில்லியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதிலும், நோய் பரவாமல் தடுப்பதிலும் தில்லி அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோய் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நோயாளிகள் யாரும் திருப்பி அனுப்பப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோய் பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படுகிறது.

தனியார், மருத்துவமனைகளை விட வேகமாக பரிசோதனை முடிவுகளும் அளிக்கப்படுகின்றன. இதைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் என டெங்கு நோய் சிகிச்சைக்கான வசதிகள் அபரிதமாக உள்ளன.

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய ஆலோசனை அளிக்கப்படுவதை மருத்துவமனையின் நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலைநகரில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளிகளைக் கையாளும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு காய்ச்சல் மருத்துவப் பிரிவுகளை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, வீடுகளில் கொசுக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஊழியர்கள் மெத்தனப் போக்குநடன் நடந்துகொள்வதை அரசு சகித்துக் கொள்ளாது.

தில்லியில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

எம்எல்ஏக்களுக்கு கேஜரிவால் உத்தரவு

டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை தினந்தோறும் 2 முறை சென்று பார்வையிட வேண்டும் என்று தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அரவிந்த கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேஜரிவால் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், 27 எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தங்கள் தொகுதியில் டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை தினந்தோறும் 2 முறை சென்று எம்எல்ஏக்கள் பார்வையிட வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் உள்ளதா என்பதை அறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

மக்களிடம் உள்ள பீதி குறையும் வரை இந்த நடவடிக்கையை எம்எல்ஏக்கள் தொடர வேண்டும். டெங்குவுக்கான அவசர உதவி எண்: 23307145 தொடங்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments