FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் ஊழலை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு தீவிர நடவடிக்கை

தில்லியில் அனைத்துத் துறைகளிலும் ஊழலை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தில்லியில் அனைத்துத் துறைகளிலும் ஊழலை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதுதொடர்பாக தில்லி அரசின் தலைமைச் செயலாளர் கே.கே.சர்மா தலைமையில் அனைத்து துறைகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அப்போது இதற்கான திட்ட வரைவுகள் முடிவு செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது:  இதற்காக அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் இணைய பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்டமாக போக்குவரத்துத் துறை, கட்டடங்கள் துறை ஆகியவற்றில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இணைய பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.  மேலும், அரசுத் துறைகளில் கண்காணிப்பை பலப்படுத்தும் நோக்கில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு அதிகாரிகளை அதிகளவில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments